முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாப விமோசனம்: விடுதலையின் கதையா? அல்லது விமோசனமற்ற சாபத்தின் நினைவூட்டலா?

 நீங்கள் இதை படிக்காதீர்கள் |  சாப விமோசனம்: விடுதலையின் கதையா? அல்லது விமோசனமற்ற சாபத்தின் நினைவூட்டலா? ஒரு பெண்ணின் மௌனம் பேசத் தொடங்கும் இடம்                                                             சாபம் – என்பது வெறும் சொல் அல்ல . அது ஒரு சமூகத்தின் கூட்டுப் பழிவாங்கும் உணர்வின் மொத்த உருவம் , குளத்தில் வீசப்பட்ட கல்லைப் போல வட்டமிட்டுப் பரவும் ஒரு நஞ்சு .  புதுமைப்பித்தனோ , அந்தச் சாபத்தின் உட்புற வெப்பத்தைத் தன் விரல் நுனியில் சுமந்துகொண்டு , நம்மை ஒரு மூலைக்கு இழுத்துச் செல்கிறார் .  “ சாப விமோசனம் ” வாசிக்கத் தொடங்கும்போதே , நமக்குத் தெரிந்துவிடுகிறது – இது அகலிகையின் கதை மட்டுமல்ல , “ அவள் ” பெயர் தெரியாத , ஆனால் உடல் மட்டுமே தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்ட எல்லாப் பெண்களின் கதையும் .   புதுமைப்பித்தனின் எழுத்தில் எரியும் கோபம் ?  அது எங்க...

மீனால் முளைத்த அன்பு! பகுதி 2

  மீனால் முளைத்த அன்பு ! பகுதி 2: பாழாய்ப்போன மனசும், உடைந்த கண்ணாடிப் பாட்டிலும்   நீங்கள் இதை படிக்காதீர்கள் !  சமூக மாற்றத்திற்கான ஒரு சிறு விதை!                                           இந்தப் பாழாய்ப்போன மனசு இருக்கே... நம்மளைச் சுத்தி விட்டு வேலை பார்க்கும் மட்டுமில்லாமல், "ஏண்டா பண்றேன்?" என்று நமக்கே கேள்விக்குறியை மிச்சம் வைக்கும். அந்த சரக்... சரக்... சத்தம் என் மனசுக்குத்தான் முதலில் கேட்டது. அது வேறு ஒன்றுமில்லை — சீவலைஸ். சீவலைஸ் பற்றி இப்போதைய தலைமுறைக்குத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.  தெரிந்துகொள்ள வாய்ப்பு இருந்தாலும், அவர்களுக்கு அதில் விருப்பம் இல்லை. மழைக்காலத்தில் மின்சாரம் போன வீட்டில் தவித்துக் கிடக்கும் ஒரு எளிய மெழுகுவர்த்திக்கும், நவீன எல்இடி (LED) பல்புக்கும் இருக்கிற அதே வித்தியாசம்தான் இதற்கும். சீவலைஸ் என்றால், ஒரு பெரிய பனிக்கட்டியை எடுக்க வேண்டும். தச்சுப் பட்டறையில்  மரத்தைச் சீவுவதற்கு ஒரு இரும்புக்கருவி வைத்திருப்பார...