பொறுப்புத் துறப்பு: சொற்களின் சுமை
தளம்: நீங்கள் இதை படிக்காதீர்கள் முகவரி:
ஒரு எச்சரிக்கை... அல்லது ஒரு வேண்டுகோள்.
இங்கே நான் கொட்டியிருக்கும் சொற்கள் அனைத்தும் எனது அகத்தின் பிரதிபலிப்புகள். 'நீங்கள் இதை படிக்காதீர்கள்' என்ற இந்தத் தளத்தில் உள்ளவை எவரையும் காயப்படுத்தவோ, மாற்றவோ அல்லது போதிக்கவோ முளைத்தவை அல்ல.
உண்மையின் நிழல்:
மனதின் மாயத்திரை: எனது உளவியல் (Psychology) பின்புலத்தைக் கொண்டு இங்கே பகிரப்படும் குறிப்புகளோ அல்லது வாழ்வியல் சிந்தனைகளோ ஒரு புரிதலுக்காக மட்டுமே. அவை ஒரு மருத்துவ சிகிச்சையோ அல்லது இறுதித் தீர்ப்போ அல்ல. மனதின் சிக்கல்கள் ஒரு சில வரிகளில் அடங்கிவிடுபவை அல்ல; அவை ஒரு பெரும் பெருங்கடல்.
பயணமும் பாதையும்: எனது பயண அனுபவங்கள் என்பது நான் கடந்த பாதைகளின் சித்திரங்கள். காலமாற்றத்தில் அந்தப் பாதைகள் மாறலாம், தடங்கள் அழியலாம். எனவே, எனது பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு நீங்கள் மேற்கொள்ளும் முடிவுகளுக்கு அந்தந்தச் சூழ்நிலைகளே பொறுப்பு.
ஒப்புதல்: இந்தத் தளத்திற்குள் நீங்கள் நுழைந்த கணமே, இங்கே வீசும் காற்றின் வாசனையையும், சொற்களின் சுமையையும் நீங்கள் ஏற்றுக்கொண்டதாகவே அர்த்தம். நான் ஒரு நிமித்தம் மட்டுமே; இதன் விளைவுகளுக்கு உங்கள் மனசாட்சியே சாட்சி.
ஏற்கனவே சொன்னதுதான்...
நீங்கள் இதை படிக்காதீர்கள்! மீறிப் படித்தால், அதன் பின் விளைவுகளுக்குத் தாமோதரன் பொறுப்பல்ல.
கருத்துகள்
கருத்துரையிடுக